தஞ்சாவூர் பூமால் ராவுத்தர் தெருவைச் சேர்ந்த சத்தியசீலன் (22) அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது சிறுமியை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துவைத்துள்ளார். அதனை காட்டி மிரட்டி தொடர்ச்சியாக பலாத்காரம் செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாத சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சத்தியசீலன் போக்சோவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.