மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. நாக்பூரின் புறநகர் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பிடெக் 2ம் ஆண்டு படித்து வந்த 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை ஒரு நபர் கோடாரியைக் காட்டி மிரட்டி, வலுக்கட்டாயமாக புதருக்குள் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். அங்கிருந்து தப்பிய பெண் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.