தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது கோனூர் நாடு. இங்கு அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோயிலின் இறைவன் அகத்தீஸ்வரர், இறைவி பெரிய நாயகி. துன்பம் நீங்கி, தூய மன ஓட்டத்தை ஏற்படுத்தி மனக்கவலைகளை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்ட கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபாட்டால் திருமணயோகம் கிட்டும், குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.