ரஷ்யாவைச் சேர்ந்த வாலண்டினா வாசிலீவ் என்ற பெண், 40 ஆண்டுகளில் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். மொத்தத்தில் அவர் தனது வாழ்நாளில் 27 முறை கருவுற்று இருக்கிறார். இதன் மூலம் வாழ்நாளில் அதிக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி என்ற கின்னஸ் சாதனையை அவர் படைத்துள்ளார். 16 முறை இரட்டையர்களையும், 7 முறை மூன்று குழந்தைகளையும், 4 முறை ஒரே அடியாக 4 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். 69 குழந்தைகளைப் பெற்றெடுத்த நிலையில் அவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.