திருவண்ணாமலையில் சில தினங்களுக்கு முன்னர், தவெக-வின் மாவட்ட செயலாளர் பாரதிதாசனின் புதுமனைப் புகுவிழாவில் திமுக அமைச்சர் ஏ.வ. வேலு கலந்து கொண்டார். அவருக்கு 20 ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை, மயில் இறகால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிலையில் தவெக நிர்வாகி பாரதிதாசன், விஜய்க்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியதாக தெரிகிறது. அதில், “இனிவரும் காலங்களில் என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்கள் தவிர வேறு எந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மாட்டேன்” என குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.