சென்னையில் நடைபெற்றுவரும் திமுக சட்டத்துறையின் 3ஆவது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் இனத்தை காக்கும் அரணாக, தூணாக திமுக சட்டத்துறை திகழ்கிறது. திமுகவில் உள்ள அணிகளில் தனித்துவமான அணி சட்டத்துறை அணி. இது வழக்கறிஞர் அணி மட்டுமல்ல; கழகத்தை காக்கும் காவல் அணி. எமர்ஜென்சி காலத்தில் நான் உள்ளிட்ட பலரை பாதுகாத்தது திமுக சட்டத்துறை தான்” என்றார்.