இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தமிழக அரசியல் வரலாற்றில் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு இன்று (டிச. 26) 100வது ஆண்டு பிறந்த நாள் ஆகும். 1925ல் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளிக் காலத்திலேயே ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றார். அன்று தொடங்கிய ஒடுக்கப்பட்ட, ஏழை, விளிம்பு நிலை மக்களுக்கான அவரின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.