தாமிரபரணி கரையில் உள்ள கருங்குளம் திருத்தலத்தை 'தென்திருப்பதி' என அழைக்கின்றனர். இந்த கோயிலில் உருவம் இல்லாமல் சந்தனக் கட்டையில் வெங்கடாஜலபதி மூலவராக உள்ளார். இங்கு இருக்கும் உறங்கா புளியமரம் பூக்கும். ஆனால் காய்க்காது. இங்கு வழிபடுபவர்களுக்கு நோய் தீரும், குழந்தை வரம் கிடைக்கும். கோயில் நடை காலை 8:00 மணி முதல் 10:30, மாலை 5:30 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். நெல்லை - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 18 கி.மீ தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது.