தீராத நோய்களைத் தீர்க்கும் மகிமைகள் நிறைந்த கோயில்

79பார்த்தது
தீராத நோய்களைத் தீர்க்கும் மகிமைகள் நிறைந்த கோயில்
சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருவள்ளூர் ஸ்ரீதேவி - பூதேவி சமேத வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில். இக்கோயில் 108 வைணவ திவ்ய தேசமாகும். இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். இந்த திருத்தலத்தை திருமங்கையாழ்வார், மங்களாசாசனம் செய்துள்ளார். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இத்தலத்தில் 9 கரைகளுடன் அமைந்துள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.