அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமையை அனைவரும் பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும். வாக்களிக்காதவர்கள் வாக்களிப்பின் மதிப்பை அறிந்து கொள்ள இரண்டு கைகளும் இல்லாதவர் கால்களால் வாக்களித்த சம்பவம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. குஜராத் மாநிலம் நாடியாட் என்ற இடத்தில் உள்ள வாக்குச் சாவடியில் அங்கித் சோனி என்ற இளைஞர் தனது கால்களால் வாக்களித்து தனது வாக்குரிமையைப் பயன்படுத்தினார். தேர்தலில் வாக்களிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் அங்கித் இரு கைகளையும் இழந்தார்.