பெற்றோர் இறந்த சோகத்தில் வாலிபர் பலி!

2886பார்த்தது
பெற்றோர் இறந்த சோகத்தில் வாலிபர் பலி!
தஞ்சை மாவட்டம் வேப்பங்காடு கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மற்றும் அவரது மனைவியும் உடல் நலக்குறைவு காரணமாக அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களது மகன்கள் வீரஅரசன் (26) கேசவராமன் (24) ஆகிய இருவரும் தாய் மாமா வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வந்தனர். தனது பெற்றோர் இறந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வீரஅரசன் கரையான் பூச்சி மருந்தை குடித்து விட்டார். இதனால் மயக்கமடைந்த அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரஅரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி