இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் கிளினிக்கில் இரண்டு பேர் சோபாவில் அமர்ந்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு வளர்ப்பு நாய் அவர்களிடத்தில் செல்கிறது. அதில் ஒரு நபர் அங்கிருந்து எழுந்து போகவே மற்றொரு நபருடன் அந்த நாய் சென்றது. அமைதியாக இருந்த நாய் திடீரென அந்த நபரை கடித்து குதற ஆரமித்தது. இதைத் தொடர்ந்து நாயால் பாதிக்கப்பட்ட அந்த நபர் நாயை வெளியே கொண்டு செல்லும் விதத்தில் கதவைத் திறந்து அதை வெளியேற்றுகிறார். இந்த சம்பவமானது அந்த பெட் க்ளினிக்கினுள் நடக்கிறது.