சுவற்றில் உள்ள பென்சில் கறை முதல் எண்ணெய் கறைகளை நீக்க பேக்கிங் சோடா ஒரு சிறந்த பொருளாகும். போக்கிங் சோடாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். பின்னர், ஒரு காட்டன் துணியை அதில் நனைத்து அழுக்கும் இருக்கும் பகுதிகளில் தேய்த்து அரை மணி நேரத்திற்கு ஊற விடுங்கள். பின்னர், அந்த இடத்தை சுத்தமான நீரில் அழுத்தி தேய்த்து துடைக்கவும். இப்படி செய்வதால் அந்த பகுதிகளில் உள்ள அழுக்குகளை எல்லாம் நீங்கும்.