தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகதீஷ் (20) என்ற இளைஞர் நேற்று (ஜூன் 1) இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. அதேபோல், புது கிராமம் செண்பக நகர் பகுதியில் ஒரு வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல், கஸ்தூரி (48) என்ற பெண்ணை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது. இந்த நடுங்கவைக்கும் சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.