உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 17 வயது கூட நிரம்பாத சிறுமியுடன் 50 வயது ஆசிரியை ஒருவர் தலைமறைவாகியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜூலை மாதம், மைனர் மாணவி ஒருவரை ஆசிரியரால் கடத்தி சென்றுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், சிறுமியின் ஆபாசமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து கிராம மக்களுக்கு அனுப்பி வைரலாக்குவதாக சிறுமியின் தந்தை புகாரளித்துள்ளார்.