கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகணேஸ்வரன். இவர், பண்ணாந்தூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்த நிலையில், சுகனேஸ்வரன் வீட்டிற்கு ஐஸ்வர்யா ஓடிவந்துள்ளார். இதனையறிந்த அவரது உறவினர்கள் ஐஸ்வர்யாவை அழைத்துச்செல்ல வந்தபோது ஏற்பட்ட தகராறு கலவரமாக மாறியது. இதனைத் தடுக்க வந்த காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்ட சக காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.