அமெரிக்கா: மனைவியை கொலை செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியரான பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் படேல்(34) பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2.16(250,000 டாலர்) கோடி சன்மானம் வழங்கப்படும் என எஃப்.பி.ஐ அறிவித்துள்ளது. 2015-ல் மனைவி பலேக் பட்டேலை பத்ரேஷ்குமார் குத்திக்கொன்றார். இந்த வழக்கில் அவருக்கு எதிராக கைதாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், தலைமறைவானார். அவர் அமெரிக்காவில் உறவினர் வீடுகளிலோ அல்லது கனடா வழியாக இந்தியாவிற்கு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.