இந்த மாதம் வானில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் ஆகிய 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வர உள்ளன. இந்த நிகழ்வை 21-ம் தேதி வானில் பார்க்க முடியும். தொடர்ந்து 4 வாரங்களுக்கு சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் இந்த நிகழ்வை நம்மால் காண முடியும். யுரேனஸ், நெப்டியூன் தவிர்த்து ஏனைய கோள்களை தொலைநோக்கியின்றி வெறும் கண்களால் பார்க்க முடியும். கோள்கள் அடிக்கடி இது போல் ஒரே நேர்கோட்டில் சீரமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.