கடந்த 2023 ஆகஸ்ட் 12-ம் தேதி மழையால் ரத்து செய்யப்பட்ட ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி, செப்டம்பர் 10-ம் தேதி நடத்தப்பட்டது. போக்குவரத்து நெரிசலால் நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என கூறி ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி சென்னை அண்ணாநகரை சேர்ந்த அர்ஜுன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.