தெரு நாயை கொடூரமாக கடித்த பிட் புல் நாய்

63998பார்த்தது
உத்திரப் பிரதேசம் மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 53ல் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில் படுத்திருந்த தெருநாய் ஒன்றை பிட் புல் கொடூரமாக கடித்து தாக்கியுள்ளது. இதனால் தெருநாய் பலத்த காயம் அடைந்தது. பிட்புல் நாயின் உரிமையாளர் தடுக்க முயன்றும் பிட்புல் நாய் அசரவில்லை. இதுதொடர்பான வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் பிட்புல் நாய்களுக்கு இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் வளர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிட்புல் நாய் கடித்து மனிதர்கள் உயிரிக்கும் சம்பவங்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நடந்துள்ளன.

தொடர்புடைய செய்தி