வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இது வருகிற அக்.14 ஆம் தேதி தீவிரமடைந்து வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இது மேலும் தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.