தென்காசி மாவட்டம் சுரண்டையில், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச மிக்சியுடன் தனியார் வாகனம் ஒன்று நிற்பதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து தனியார் வாகனத்தை சுரண்டை போலீசார் காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். விசாரணையில் கன்னியாகுமரி சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் ஏலம் விடப்பட்டு தென்காசிக்கு 361 மிக்ஸி கொண்டு செல்லப்படுவதாக டிரைவர் சந்தோஷ் கூறினார். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.