கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளே இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் நோயாளிகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உ.செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனை சென்ற அவர்கள் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.