கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்தவர் சிவதாஸ் (49). இவர் மனைவி ஹிதா (45). இருவருக்கும் நேற்று (செப். 10) உறவினர்கள் பலமுறை போன் செய்தும் எடுக்காத காரணத்தால் வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது தம்பதி தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றினார்கள். போலீசார் கூறுகையில், “தம்பதிக்கு குழந்தைகள் இல்லை, கடன் பிரச்னையால் தற்கொலை செய்திருக்கலாம்.” என சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.