சென்னை புழல் அடுத்த கதிர்வேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1986 - 87-ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசி, கைக்குலுக்கி, ஆரத்தழுவி வரவேற்றனர். கல்வி பயிற்றுவித்த ஆசிரியைகளின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஆசிரியர்களிடம் கெஞ்சி பிரம்படியும் வாங்கிக் கொண்டனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.