இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவரான மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 79-வது பிறந்த நாள் இன்று (ஜூன் 4). பாடகர் மட்டுமின்றி நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாளராக எஸ்பிபி வலம் வந்தார். தனது 50 வருட சினிமா வாழ்க்கையில் சுமார் 40,000 பாடல்கள் வரை பாடி உலக சாதனை படைத்துள்ளார். மேலும், 6 தேசிய விருது, 4 ஃபிலிம்ஃபேர் விருது போன்றவற்றையும் அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.