எஸ்பிஐ வங்கி தங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்பும் பெண்களுக்காக 'ஸ்திரி சக்தி' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பெண்களால் மட்டுமே நடத்தப்படும் அல்லது குறைந்தபட்சம் 50%க்கும் அதிகமான பங்குகளைக் கொண்ட வணிகங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. ரூ.5 லட்சத்துக்கும் குறைவான கடனுக்கு ஜாமீன் எதுவும் தேவையில்லை. இதன் மூலம் பெண்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடன் தொகை மற்றும் கடன் பெறப்பட்ட காரணத்தைப் பொறுத்து கடன் விதிமுறைகள் மாறுபடும். இதற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 18 வயது மற்றும் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ கிளையை அணுகவும்.