பெண்ணை விரட்டிச் சென்று கடித்த சிங்கம்.. பதறவைக்கும் சம்பவம்

68பார்த்தது
பாகிஸ்தானில், தெருவில் நடந்து சென்ற ஒரு பெண்ணையும், இரண்டு குழந்தைகளையும் சிங்கம் ஒன்று விரட்டிச் சென்று கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் லாகூரில் உள்ள ஜோஹர் டவுனில் உள்ள ஒரு தனியார் பண்ணை வீட்டில் செல்லமாக சிங்கம் வளர்க்கப்பட்டது. இந்த சிங்கம் தெருவில் சென்றவர்களை தாக்கியது. இதில் காயமடைந்தவர்கள், தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மூன்று நபர்களைக் கைது செய்தனர்.

நன்றி: NuktaPakistan

தொடர்புடைய செய்தி