மரணக் கயிற்றில் ஊசலாடிய உயிர்.. பதறவைக்கும் வீடியோ

6693பார்த்தது
காட்டாற்று வெள்ளம் காரணமாக ஒருவர் கயிற்று பாலத்தில் உயிரை கையில் பிடித்து தொங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பல நதிகளில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஓடுகிறது. இந்நிலையில், அங்குள்ள Anjaw மாவட்டத்தில், இந்தியா-சீனா-மியான்மர் எல்லையில் பழமையான பாலத்தை கடக்கும்போது ஒருவர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். அவர் பத்திரமாக மீட்கப்பட்டாலும், உயிரை கையில் பிடித்த அவரின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி