மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று (டிச. 24) அனுசரிக்கப்படுகிறது. இன்றும் எம்.ஜி.ஆருக்கு ஓட்டு போடுகிறோம் என்று இரட்டை இலைக்கு ஓட்டு போடுபவர்கள் இருக்கிறார்கள் என சொன்னால் அது மிகையாகாது..! தமிழ் திரை உலகை பல வருடங்களும், தமிழ்நாட்டை 10 வருடங்களும் ஆட்சி செய்த எம்.ஜி.ஆர். மக்களின் மனதில் நீங்காத தனிப்பெரும் தலைவராக காலத்திற்கும் உயர்ந்து நிற்கிறார்.