டெல்லி: நேரு விஹார் பகுதியில் நேற்றிரவு (ஜூன்.07) உறவினர் வீட்டுக்கு சென்ற சிறுமி 2 மணி நேரமாக திரும்பாததால் பெற்றோர் அவளை தேடத் தொடங்கினர். இதையடுத்து, சிறுமியின் தந்தை அக்கம்பக்கத்தினர் சொன்ன தகவலை கொண்டு அருகில் உள்ள பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு அவர் சூட்கேஸில் ரத்த வெள்ளத்தில், அரை நிர்வாணமாகக் கிடந்த தனது மகளின் உடலை கண்டு துடித்துள்ளார். இந்நிலையில், நவ்ஷத் என்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.