தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை, அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வெல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த ஒரு மாணவிக்காக மட்டுமே கடந்த 3 ஆண்டுகளாக அந்த பள்ளி செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.