திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை (ஜூலை. 07) நடக்கிறது. இதையொட்டி மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்கவிநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோயில் உள்பிரகாரத்தில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இந்நிலையில் கோயிலில் 108 ஓதுவார்களுடன் அமர்ந்து தியா என்ற சிறுமி திருப்புகழ் பாடியது பக்தர்களை சிலிர்க்க வைத்தது.