நண்பனை சரமாரியாக வெட்டிக்கொன்ற சக நண்பன்

85பார்த்தது
நண்பனை சரமாரியாக வெட்டிக்கொன்ற சக நண்பன்
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள இடைகால் பகுதியை சேர்ந்த முருகன், அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது கோயிலுக்கு நியமனம் செய்த ஆட்டை, பாபு காலால் எட்டி உதைத்ததால், அதனை முருகன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாபு, வீட்டில் இருந்த அரிவாளை கொண்டுவந்து முருகனை சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளார். போலீசார் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி