நாதக தலைமை ஒருங்கிணைப்பார் சீமான் பெரியார் குறித்து அண்மை காலமாக தொடர்ந்து கூறி வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தும் நிலையில் பெரியாரிய உணர்வாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சீமானை கண்டித்து அவர் வீட்டை இன்று (ஜன. 22) அவர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து சீமானின் உருவப்படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து ஆவேசத்தை வெளிப்படுத்தினார்கள்.