பிரபல சின்னதிரை நடிகை ரக்சிதா மகாலட்சுமி அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு ஹார்மோன் பிரச்சனை உள்ளது. உணவை நுகர்ந்து பார்த்தாலே எனக்கு உடல் எடை கூடிவிடும். ஆரோக்கியமான உணவு முறையின் மூலம் இந்த நோயை குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்" என்று கூறினார். இதனால் அவரின் ரசிகர்கள் நடிகை ரக்சிதா மகாலட்சுமிக்கு இப்படி ஒரு நோயா என அதிர்ச்சியடைந்துள்ளனர்.