புத்தாண்டு பண்டிகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். இது தவிர சபரிமலை ஐயப்ப பக்தர்கள், பாத யாத்திரை பக்தர்கள் வருகையால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்று (ஜன., 01) பழனி கோயிலுக்கு மதுரையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 30 அடி நீள அலகு குத்தி வந்தார்.