திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலுக்கு நேற்று (செப். 30) ஒரே நாளில் மட்டும் 66,986 பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் 26,163 பக்தர்கள் மொட்டையடித்து தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினார்கள். மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் திருப்பதி கோயிலுக்கு ரூ. 5.05 கோடி காணிக்கை வழங்கப்பட்டது. திருப்பதி லட்டு தொடர்பான சர்ச்சை தொடரும் சூழலிலும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.