நார்வேயில் ஆர்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் தீவு, பூமியின் கடைசி நாடாக உள்ளது. இங்கு 6 மாதம் பகல் 6 மாதம் இரவாக காட்சி தருகிறது. ஆறு மாத இரவின் போது சூரியன் அடிவானத்திற்கு கீழ் மறைந்திருப்பதால் சூரியக் கதிர்கள் பட்டும் படாமலும் தெரியும். இதற்கு 'போலார் நைட்' என்று பெயர். இந்த இரவை அனுபவிப்பதற்காகவே பலரும் இந்த தீவிற்கு வந்து செல்கின்றனர். இந்த இரவானது அக்டோபரில் பிற்பகுதி தொடங்கி பிப்ரவரி நடுப் பகுதி வரை நீடிக்கிறது.