பிறந்து ஒரே நாளில் குளத்தில் வீசப்பட்ட குழந்தை மரணம்

70பார்த்தது
பிறந்து ஒரே நாளில் குளத்தில் வீசப்பட்ட குழந்தை மரணம்
தெலங்கானா மாநிலம் அனுமகொண்டா, கோபாலபூர் அருகில் இருக்கும் குளத்தில் இன்று ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பிறந்து ஒரு நாளே ஆன, தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் பிணமாக மிதந்து வந்த குழந்தையின் காட்சி பலரையும் கண்கலங்க வைத்தது. குளத்தில் வீசுவதற்கு பதிலாக யாரிடமாவது கொடுத்திருக்கலாமே என கிராம மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி