மும்பையை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை 4 மாதங்களுக்கு முன்னர் சந்தித்த சுனிதா என்ற பெண் அவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி அழைத்து சென்றார். பின்னர் வீடு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட இளம்பெண் சில ஆண்களால் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டார். அண்மையில் தப்பிய அவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.