நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸ் கார்ப்பரேஷனின் தலைவர் பவன் முன்ஜால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கணக்குகளில் ரூ.5.96 கோடி பணப் பரிவர்த்தனைகளில் தவறான கணக்கீடு செய்ததாக டெல்லி காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொய்யான பில்களை உருவாக்கி முஞ்சால் ரூ.55.5 லட்சம் வரிச் சலுகை பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தியால் திங்களன்று உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஹீரோ மோட்டார்ஸ் பங்குகள் சுமார் 3 சதவீதம் குறைந்தன.