கடுமையான போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட டிராஃபிக்கிலேயே மதிய உணவை முடித்துக் கொண்ட கார் ஓட்டுநரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு அவுட்டர் ரிங்ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் 3மணிநேரத்திற்கும் மேலாக முக்கிய சாலைகள் ஸ்தம்பித்துள்ளது. இதனை புரிந்து கொண்ட தனியார் கார் ஓட்டுநர் ஒருவர் எப்படியும் கார் நகரப் போவதில்லை . எனவே இந்த டிராஃபிக்கில் மதிய உணவை முடித்துவிடலாம் என சாப்பிட்டுவிட்டு அதனை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.