கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த மாணவிக்கு கடந்த 23ம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று (டிச.26) மாணவிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. வழக்கு பதிவுசெய்த போலீசார் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என விசாரித்து வருகின்றனர்.