தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே அரசூர் பனைவிளையில் வீட்டின் அறையில் இயங்கிக்கொண்டிருந்த ஏ.சி.யை ஆஃப் செய்த சிறிதுநேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அறையில் ஏ.சி. வெடித்து தீப்பற்றியதும் உடனடியாக நீர் ஊற்றி தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நல்ல வேளையாக அறையில் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் உயிர் தப்பியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.