கிழக்கு பசிபிக் பெருங்கடலின் துணை வெப்பமண்டலத்தில் காணப்படும் கடல் பறவை நீலக்கால் பூபி. இந்த பறவை தனித்துவமான மற்றும் பிரகாசமான நீல நிற கால்களை கொண்டுள்ளது. இந்த பறவை 90 செ.மீ நீளமும், இறக்கைகள் 1.5 மீ. நீளம் வரையும் இருக்கும். பெண் பறவை ஆண் பறவையை விட சற்று பெரியது. இதன் விருப்பமான உணவு மீன்கள். ஆண் பறவை இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் இந்த நீல நிற பாதங்களை வைத்து தங்களின் துணையை ஈர்க்கின்றன.