சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் புராய் கிராமத்தைச் சேர்ந்த தனுஸ்ரீ கோசரே (9) உலகின் கோல்டன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். நீச்சலில் ஆர்வம் கொண்ட இச்சிறுமி ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைவிடாமல் 5 மணி நேரம் நீச்சல்குளத்தில் நீந்தி சாதனை படைத்தது. சாதனையை பெறும் சந்தர்ப்பத்தில், 12 மணி நேரம் தொடர்ந்து நீந்துவதே தனது அடுத்த இலக்கு எனவும் சிறுமி தெரிவித்தார்.