மத்தியப் பிரதேச மாநிலம் ரீவா மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் நேற்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான். சுமார் 70 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கிக் கொண்டான். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் மற்றும் மீட்புப் படையினர், சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.