கேரளா: திருவனந்தபுரம் வர்கலாவில் 9ஆம் வகுப்பு சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிறுமியின் தாய் மாமா கைது செய்யப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், குற்றவாளியை கைது செய்தனர். குற்றவாளி தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாதங்களாக சகோதரி வீட்டில் வசித்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் சிறுமியை பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்துள்ளது.