ஆஸ்கார் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாரெட் லெட்டோ (53). இவர் மீது சுமார் 9 பெண்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். 16 வயதிலிருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஒரு மாடல் அழகி கூறியுள்ளார். மேலும், ஜாரெட் 17 வயதில் தகாத முறையில் நடந்து கொண்டதாக மற்றொரு பெண் கடந்த மாதம் தனது இன்ஸ்டாவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, மற்ற பெண்களும் அவர் மீது புகார்களை தெரிவித்துள்ளனர். ஆனால், ஜாரெட் தரப்பு இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.